Mechanics Essay Ques – Tamil Medium

a.

ஒரு சைக்கிளோட்டியும் மோட்டார் வண்டியும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்கடியில் ஓய்வில் உள்ளன. அவர்கள் பக்கம் பக்கமாக அவற்றின் முன்சில்லு ஒரே கோட்டில் இருக்கும் வண்ணம் உள்ளன. விளக்கு பச்சையாக மாறியதும் இரண்டும் ஒரே கிடையான பாதையில் ஒரே திசையில் முன்னோக்கி நகர்கின்றன. விளக்கு பச்சையாக மாறிய கணத்திலிருந்து அவை மீண்டும் ஒரே மட்டத்தில் வரும் வரையான மோட்டார் வண்டியினதும், சைக்கிளோட்டியினதும் இயக்கத்தினைக் காட்டும் வேக நேர வரைபுகள் அடுத்த பக்கத்தில் காட்டப்பட்டுள்ளன.

  1. வரைபின் ஆரம்பத்தில் 0.8 s நேர இடை எதைக் குறிக்கின்றது.
    1. ஒளி பச்சையாக மாறிய கணத்திலிருந்து மோட்டார் வண்டி சைக்கிளோட்டியின் வேகத்தைப் பெறுவதற்கு எவ்வளவூ நேரம் எடுக்கும்?
    2. இந் நேரத்தில் சைக்கிளோட்டிக்கும் மோட்டார் வண்டிக்கும் இடையிலுள்ள துhரம் என்ன?
  2. அவை மீண்டும் ஒரே மட்டத்திற்கு வரும் போது கட்டுப்பாட்டு விளக்கிலிருந்து என்ன துhரத்தில் இருக்கும்?
  3. வரைபால் குறிக்கப்படும் நேர ஆயிடையில் சைக்கிளோட்டியின் சராசரி வேகத்திற்கும் மோட்டார் வண்டியின் சராசரி வேகத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன?
  4. சைக்கிளோட்டி மோட்டார் வண்டி ஆகிய இரண்டினதும்,
    1. ஆர்முடுகல் நேர வரைபு
    2. இடப்பெயர்ச்சி நேர வரைபு ஆகியவற்றை வரைக.

b.

ஒரு பலுhன் நிலைக்குத்தாக மேல்நோக்கி 10 m/s வேகத்துடன் எழும்புகின்றது. தரையிலிருந்து 45 m உயரத்தில் உள்ள போது பரசூற்றில் இறங்குபவர் (Parachutist) அதிலிருந்து வெளியேறுகின்றார்.

  1. பரசூட் திறக்கமுன்னர் அவரின் ஆர்முடுகலிற்கும் பகுதி (a) இல் உள்ள சைக்கிளோட்டி, மோட்டார் வண்டியின் ஆர்முடுகல்களுக்கும் இடையிலான வித்தியாசங்கள் என்ன?
  2. வெளியேறி 3 m இன் பின் பரசூற்றை திறந்து 5 m/s² என்னும் மாறா வீதத்தில் அமர்முடுகுகின்றார்.
    1. பரசூற்றை திறக்கும் போது தரையிலிருந்து அவன் என்ன உயரத்தில் இருப்பான்?
    2. பரசூற்றை திறக்கும் போது அவனின் வேகம் என்ன?
    3. பலுhனிலிருந்து வெளியேறிய பின் எந்நேரத்தில் தரையை அடிப்பான்?
    4. தரையை என்ன வேகத்துடன் அடிப்பான்?

Answers:

 1,079 total views,  1 views today

One Reply to “Mechanics Essay Ques – Tamil Medium”

Leave a Reply

Your email address will not be published.