நுணுக்குக்காட்டிகளும் தொலைகாட்டிகளும்

நுணுக்குக்காட்டிகள்

பொருளை கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்க்கும் போது தெளிவாக ஆராய முடியும் (அவதானிக்க முடியும்). தெளிவுப்பார்வையின் இழிவுத் தூரத்திற்குள் பொருளை கொண்டு வரும் போது அது கண்ணுக்கு தெளிவாக தெரிவதில்லை. இச் சந்தர்ப்பத்தில் பொருள்களை அவதானிப்பதற்கு நுணுக்குக் காட்டி பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே அண்மையிலுள்ள வெற்றுக் கண்ணால் அவதானிக்க முடியாத சிறிய பொருட்களை அவதானிப்பதற்காக நுணுக்குக்காட்டி பயன்படுத்தப்படுகின்றது.

நுணுக்குக் காட்டியை பயன்படுத்தும் போது இறுதி விம்பத்தை தெளிவுப்பார்வையின் இழிவுத் தூரத்திலும், முடிவிலியிலும் செப்பம் செய்ய முடியூம். இறுதி விம்பம் தெளிவுப்பார்வையின் இழிவுத் தூரத்தில் இருக்கும் போதே கோணப்பெரிதாக்கம் அல்லது உருப்பெருக்கும் வலு உயர்வாக இருக்கும். எனவே நுணுக்குக் காட்டிகளை தெளிவுப் பார்வையின் இழிவுத் தூரத்தில் செப்பம் செய்தலே இயல்பான செப்பம் செய்கை எனப்படும்.

குறிப்பு:
ஒளியியற் கருவிகளில் பார்வைக் கோணம் முக்கியமானதொன்றாகும். ஆனால் பொருளின் பருமனும் விம்பத்தின் பருமனும் இங்கு முக்கிய இடத்தைப் பெறுவதில்லை.

The Compound Microscope: biology, compound, en, jansen, magnify,  microscope, optics, physics, the, zacharias | Glogster EDU - Interactive  multimedia posters

தொலைகாட்டிகள்

மிகத் தொலைவிலுள்ள பொருட்களை வெறுங்கண்ணால் பார்ப்பதைவிட பெரிதாகக்காண தொலைகாட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. தொலைகாட்டிகளும் பார்வைக் கோணத்தை அதிகரிக்கின்றன.

இறுதி விம்பம் தெளிவுப்பார்வையின் இழிவுத் தூரத்தில் உண்டாகும் போதே கோணப்பெரிதாக்கம் அல்லது உருப்பெருக்கவலு உயர்வாக இருப்பினும், தொலைகாட்டியினூடு நீண்ட நேரம் பிரகாசமான பொருட்களை நோக்குவதால் கண்ணுக்கு இழிவு விகாரத்தை ஏற்படுத்தும் வகையில் இறுதி விம்பமானது முடிவிலியில் உருவாகுமாறு அவை செப்பம் செய்யப்படுகின்றன. இறுதி விம்பம் முடிவிலியில் உண்டாகும் போதுதான் தொலைகாட்டிகள் இயல்பான செப்பம் செய்கையில் உள்ளன எனப்படும்.

The Open Door Web Site : IB Physics : OPTICS : ANGULAR MAGNIFICATION BY  ASTRONOMICAL TELESCOPE

 449 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published.